திருவள்ளூர் மாவட்டம் கீழானூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடைபெற்று வந்தது.
இதற்காக அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்கம்பிகள் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வெங்கல் காவல் நிலைய போலீசார், மின் கம்பிகளை திருடிய தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.