தஞ்சையில், சாலை விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அரசு தலைமை கொறடா செழியனை மக்கள் வெகுவாக பாராட்டினர்…

130
Advertisement

திருவிடைமருதூர் அருகே, மகாதான வீதியைச் சேர்ந்தவர் நூர் முகமது.

இவர் திருவிடைமருதூரிலிருந்து – திருப்பனந்தாளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலூர் என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்த போது, மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில்,இருவருக்கும்

படுகாயம் ஏற்பட்டது. இதனிடையே, கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பதற்காக வந்த தமிழ்நாடு அரசு தலைமை  கொறடா செழியன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார். இதனைக் கண்ட அரசு தலைமை கொறடா செழியனை வெகுவாக பாராட்டினர்