தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை காண முடியவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணத்தை காண முடியாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தியாவில் சந்திர கிரகணம் பிற்பகல் 2.40 மணிக்குத் தொடங்கி 6.20 மணிவரை தென்பட்டது. இதில், முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3:46 மணியிலிருந்து மாலை 5:11 மணி வரை நடந்தது.
வட மாநிலங்களில் தென்பட்ட முழு சந்திர கிரகணம், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வான மேகமூட்டம், மழைப் பொழிவு போன்ற காரணங்களால் தெரியவில்லை. சென்னையில் சாரல் மழையின் காரணமாக சந்திர கிரகணம் தென்படவில்லை என பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.