கர்நாடகாவில், தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியவரை முன்னாள்  அமைச்சர் கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது…

30
Advertisement

கர்நாடகாவில், காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.பி பாட்டீல், பிரச்சாரத்திற்காக பாபலேஷ்வர் தொகுதிக்குட்பட்ட தேவாபூர் கிராமதிற்கு வந்துள்ளார்.

அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த ஹமானந்த துப்பாடா என்ற இளைஞன், காங்கிரஸ் வேட்பாளர் பாட்டீல், நோக்கி 5 ஆண்டுகளாக எங்கள் கிராமத்திற்கு என்ன வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எம்.பி பாட்டீல் இளைஞரை கன்னத்தில் பளார் என அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.