ஜார்கண்டில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்தனர்…

20
Advertisement

ஜார்கண்ட் மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 5 முக்கிய பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பல வகைப்பட்ட ஆயிரத்து 855 தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது சரணடைந்த பயங்கரவாதிகளில் ஒருவனை, கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.