கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்க பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் களமிறங்கியுள்ளன…..

133
Advertisement

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களைப் பிடிக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும்.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. சில கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தொங்கு சட்டப்சபை அமைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

அதேசமயம், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 25 இடங்கள் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அதன் ஆதரவைப் பெற காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளன