புதின் கடும் எச்சரிக்கை
சமாதானப் பேச்சுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஒழித்துக் கட்டி விடுவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் அதிதீவிரமாக நடந்துவரும் வேளையில், போரை நிறுத்துவதற்கான சமாதானப் பேச்சும் நடந்துவருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் புதினை நேரடிப் பேச்சுக்கு அழைத்தார். போரை நிறுத்த நான் நேரடியாகப் புதினுடன் பேசுவதுதான் ஒரே வழி என்று குறிப்பிட்டார்.
உக்ரைன் அதிபரின் இந்தக் கோரிக்கையை ரஷ்யத் தொழிலதிபரும் செல்சியா கால்பந்து கிளப் உரிமையாளருமான ரோமன் அப்ரமோலிச் கடிதம் மூலம் ரஷ்ய அதிபரிடம் வழங்கினார்.
அதைப் பார்த்த புதின் ஆவேசமடைந்ததாகவும், அவரிடம் சொல்லுங்கள் நான் அவர்களை ஒழித்துவிடுவேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.