- ஐதராபாத்தில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்த புலனாய்வு அதிகாரி மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் வருகையை முன்னிட்டு, அவர் பங்கேற்கும் ஷில்பா கலையரங்கு விழா மேடையில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேடையில் ஏறி அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது புலனாய்வு துறையினன் உதவி இயக்குநர் குமார் அம்ரேஷ் என்பவர் மேடையில் நின்றபடி புகைப்படம் எடுத்துக்கொண்டே நடந்து சென்றார்.
அப்போது மேடையில் இருந்து கால் இடறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.