செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் கவனத்திற்கு ! 

51
Advertisement

வீட்டில் பூட்டப்பட்ட வளர்ப்பு நாய் பசியால் துடித்து வீட்டையே கொழுத்திய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஒரு வீட்டில் இரு நாய்களை உள்ளே வைத்தி பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனர்  அதன் உரிமையாளர்கள்.

நாய்களை விட்டுச்சென்றது தவறில்லை ஆனால் நாய்களுக்கு உணவு வைக்காமலே சென்றதாக கூறப்படுகிறது.வீட்டின் உரிமையாளர்கள் வெகுநேரம் ஆகியும் வராததால் பசியில் துடித்த அவர்களின்  நாய் ஒன்று  சமயலறை சென்று  உணவு தேடியுள்ளது.

ஒருகட்டத்தில்,கேஸ் அடுப்பின் மீது கைகளை வைத்து உணவுவை மோப்பம் பிடித்து இறுதியில் ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சமையல் அறையிலிருந்து கிளம்பியது.நாய் கிளம்பிய சில வினாடிகளில் அந்த அடுப்பு தீ பற்ற, அருகே இருக்கும் பொருட்கள் ஒவ்வொன்றாக தீ பற்றியது.

Advertisement

தகவலறிந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு நாய்களை மீட்டனர்.வீட்டின் உரிமையாளர்களின் அலட்சியத்தால், வீட்டை சூறையாடியது தீ.