குடிபோதையில்  இருந்த  வாடிக்கையாளரிடமிருந்து  3 லட்சம் அபேஸ் செய்த மேலாளர்

314
Advertisement

ஹோட்டலில் தங்கிருந்த நபரின்  டெபிட் கார்டுகளைத் திருடி ₹3.1 லட்சம் மதிப்பிலான பணப் பரிவர்த்தனை செய்ததாக  ஹோட்டலின் மேலாளர்  கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி குருகிராமில் உள்ள இந்திரபுரியைச் சேர்ந்த விவேக் யாதவ் (60), தனது டெபிட் கார்டைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் பணம்  எடுத்ததாகவும் டெபிட் கார்டு மூலம்  தங்க நாNAணையங்களை  வாங்கியதாகவும்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ப்ரீத் பால் சங்வான் கூறுகையில் ,

புகாரளித்த நபர் , தன்னிடம் இரண்டு அட்டைகள் இருப்பதாகக் கூறினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால், வங்கிக்குச் சென்று பரிவர்த்தனையின் நிலையைச் சரிபார்க்க முடியவில்லை. அவரது உடல்நல குறைவு  காரணமாக கார்டுகளின் செயல்பாட்டை துண்டிக்க  முடியவில்லை, ஆனால் வங்கியிலிருந்து பணப் பரிவரித்தனை செய்ததற்கான குறுஞ்செய்தி  வர , அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். 

பின்னர், ஏடிஎம் சென்று கணக்கை சரிபார்த்த போது, இருப்பு குறைவாக இருப்பது தெரியவந்ததாக கூறினார்.

மேலும், இதுகுறித்து , நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட  தேதிகளில் பதிவான  சிசிடிவி காட்சிகளை  ஆராய்ந்ததில் , அவர் மூன்று  நாட்கள்  பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டலில் தங்கிருந்தாகவும் அறையை  காலிசெய்யும்  போது  கையில் பணம் இல்லாததால் , அங்கிருந்த ஹோட்டல் மேலாளரை தன்னுடன், ஏடிஎம் வரை அழைத்து சென்றுள்ளார்.

வாடிக்கையாளர் விவேக் யாதவ் குடிபோதையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி  ஹோட்டல் அறைக்கு  திரும்பிய பின் அவரின் டெபிட் கார்டுகளை திருடி ,  ₹1 லட்சம் பணத்தை எடுத்துள்ளார் மேலும் ₹2.1 லட்சம் மதிப்புள்ள தங்கM (40 கிராம்) வாங்கியதையும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

ஹோட்டல் மேலாளர் குமாரைக் கைது செய்த காவல்துறை , அவரிடமிருந்து 40 கிராம் தங்க நாணயத்தை பறிமுதல் செய்தனர்.