தூங்குவது போல் நடிக்கும் குதிரை

111
Advertisement

சில நேரங்களில் வேலை செய்ய பிடிக்கவில்லை என்றாலும், அதில் இருந்து தப்பிக்க முடியாத காரணத்தினால் தான் பல பேர் வேலையே செய்கின்றனர்.

ஆனால், sugar என பெயரிடப்பட்டுள்ள ஒரு குதிரை ஒவ்வொரு முறை வேலை வரும் போதும் திறமையாக தப்பித்து விடுகிறது.

குதிரை ஓட்டுவதற்காக யாராவது அருகில் வந்தால் தூங்குவது போல் நடிக்கும் அந்த குதிரை, அதை விட்டு அவர்கள் தூரமாக சென்ற பின் தான் எழுந்து கொள்கிறது.

Advertisement

டிவிட்டரில் வெளியாகிய இந்த குதிரையின் புகைப்படம் 482 ஆயிரம் லைக்குகளை கடந்து, 6000 கமெண்ட்களை நெருங்கி வருகிறது.

குதிரையின் மனநிலையை பொருத்தி பார்க்க முடிவதாகவும் நாமும் இது போல் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.