பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

49

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரத்தால், மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சிகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல பள்ளி, கல்லூரி வளாகங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

வகுப்பறைகளிலும் புகுந்துள்ள மழைநீரை, பம்புசெட் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தவிட்டுள்ளார்.

Advertisement