ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்  தடை

215

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால், ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தடை விதித்துள்ளார்.

மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.