ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ விபத்து

1893

ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகள், 10 பரிசல்கள், 2 வாகனங்கள் எரிந்து சாம்பலானது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பரிசல் துறையில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பரிசல் துறையில் இருந்து 10 பரிசல்கள் எரிந்து சாம்பலானது.

பரிசலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகளும் தீ விபத்தில் முற்றிலும் எரிந்தது.

மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களும் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.

தீ விபத்தில் 10 பரிசல்களின் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய் என்றும், ஆயிரம் லைப் ஜாக்கெட்டுகளின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து, ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.