ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – 9வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை

49

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருவதால், தொடர்ந்து 9வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் கன மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து 4வது நாளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு 9வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.