நீர் வரத்து குறைவு – பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி

35

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது விநாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக வருவதால் விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் விலக்கி கொண்டது.

3 நாட்களுக்கு பிறகு, அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement