உலகை உலுக்கிய ஹிரோஷிமா குண்டுவெடிப்பு சம்பவம்

hiroshima nagasaki
Advertisement

ஜப்பானின் ஹேன் சூ தீவில் அமைந்துள்ள நகரம் ஹிரோஷிமா. 73 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கொண்டது.

2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தனர்.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி இயல்பாக எல்லாம் நடந்துகொண்டிருக்க காலை 8.15 மணிக்கு ‘Enola Gay’ விமானம் மூலம் ‘Little Boy’ என்ற அணுகுண்டை ஹிரோஷிமாவின் நடுப்பகுதியில் வீசியது அமெரிக்க ராணுவம்.

பயங்கரச் சப்தத்துடன் வெடித்த அடுத்த கணம் தீப்பிழம்புகள் பற்றி எரிந்து 60,000 கட்டடங்கள் சேதமடைந்தன.

Advertisement

குண்டு வெடிப்பின் போது அதிக வெப்பம் நிலவியதால் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் உடல் கருகி உயிரிழந்தனர். குண்டு வெடிப்பால் ஏற்பட்ட கதிர்வீச்சு தாங்க முடியாமல் பல ஆயிரம் பேர் மாண்டனர்.

3 நாட்கள் கழித்து ஜப்பானின் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது அமெரிக்கா.

இந்த குண்டுவீச்சு நடந்து 6-வது நாளில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. இந்த அணுகுண்டு வீச்சுதான் 2ம் உலகப்போர் முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் உலகையே உலுக்கிய ஹிரோஷிமா குண்டுவெடிப்பு சம்பவத்தின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.