“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”

99

இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இமாசல பிரதேசத்தில் 14 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.

அவர்களில் 8.5 லட்சம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் என கூறினார்.

Advertisement

அதிகபட்ச மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது என தெரிவித்தார்.

மேலும் இந்த 8.5 லட்சம் மாணவர்களின் வருங்காலம் தொடர்ந்து இருண்ட நிலையில் உள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.