“இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு” – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

155
MRK
Advertisement

வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு, சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனால் மக்களுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால், தற்போது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய இயற்கை வேளாண் பொருட்களின் தேவையும், விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண்மைத் துறையில், இயற்கை வேளாண்மைக்கென்று தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று கூறிய அமைச்சர், இயற்கை விவசாயிகளை கண்டறிவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 33 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Advertisement