சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது

93

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய பெய்த கனமழையால், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையில் 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகல் முழுவதும் பெய்த மழை, மாலையில் சற்று ஓய்ந்தது. இதைதொடர்ந்து இரவில் மீண்டும் கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

தேனாம்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement