தங்க மகனுக்கு உடல்நலக்குறைவு

gold
Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதையடுத்து இந்தியா திரும்பிய அவர் பாராட்டு மழையில் நனைந்தார்.

இந்நிலையில், அரியானா மாநிலம் பானிபட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீரஜ் சோப்ராவுக்கு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர், சிகிச்சைக்காக அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

அவருக்கு கடும் காய்யச்சல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா டோக்கியோவிலிருந்து திரும்பிய பின்னர், ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் கூட காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.