நாளுக்கு நாள் ஒல்லியாகிட்டே போறாரே..இவர் நிஜமாவே ரோபோ ஷங்கரா? வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்.

38
Advertisement

‘கலக்கப்போவது யாரு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமாகி பிறகு படங்களில் காமெடியனாக வலம் வந்து தமிழக மக்களை சிரிக்க வைத்து வருபவர் ரோபோ ஷங்கர். கட்டு மஸ்தான உடல் அமைப்பை கொண்டிருந்த இவர் சமீப காலங்களில் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

லேசான மஞ்சல்காமாலை வந்து சென்றதாக கூறிய அவரின் அண்ணன் மகள், படம் ஒன்றிற்காகவே ரோபோ ஷங்கர் உடல் எடை குறைத்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், இன்னும் ஒல்லியாக மாறி இருக்கும் தோற்றத்துடன் ரோபோ ஷங்கரின் லேட்டஸ்ட் photo வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து இது உண்மையில் ரோபோ ஷங்கர் தானா என ரசிகர்களே திகைத்து போய் உள்ளதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.