பிடிபட்ட திருடனுக்கு “கேக்” வெட்டிய வீட்டு உரிமையாளர்கள்

40
Advertisement

பிடிபட்ட திருடனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.டெல்லி குடியிருப்பு பகுதியில் மூன்று பேர் திருடவந்துள்ளனர்.அந்நேரம் வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக்கொள்ள , மூன்றில் இரு திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர்.ஒருவன் மட்டும் மாட்டிக்கொண்டான்.

மாட்டிக்கொண்ட பின்,வீட்டின் உரிமையாளர்களிடம் ” இன்று எனக்கு பிறந்தநாள், இதுவே எனது முதல் திருட்டு,நான் அவர்களைக்காட்டிலும் இளையவன் ” என கதறி அழுதுள்ளான்.இதைக்கேட்டு மனமிரங்கிய வீட்டின் உரிமையாளர்கள்  கேக் ஒன்று ஆர்டர் செய்துள்ளனர்.

அதில் ஹாப்பி பர்த்டே “திருடன்” என ஹிந்தியில் எழுதிக்ப்பட்டுள்ளது.வைரலாகி வரும் இந்த வீடியோவில் அவனை கேக் வெட்ட வைத்து அவனுக்கு  ஊட்டிவிடுகிறார் வீட்டின் உரிமையாளர் ஒருவர்.பர்த்டே கொண்டாடிவிட்டு காவல்துறக்கியிடம் அவன்  ஒப்படைக்கப்பதாக தெரிவித்தனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement