தினம் தன் பிள்ளைகளை மூன்றுசக்கர சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் “கால்கள் இழந்த தந்தை”

299
Advertisement

தாயின் அன்பு அனைவருக்கும் தெரிந்ததே .குழந்தை கருவுற்ற நாளில் இருந்து,தன் குழந்தைகள் மீது  அன்பை வெளிப்படுத்துபவர்கள் தான் தாய்மார்கள்.அதே வேளையில்,தந்தைகள்  குழந்தைகள்  மீது  அன்பை வெளிப்படுத்தும் விதம்  சற்று வேறுபாடும்.

குழந்தையிடம் பாசத்தை நேரடியாக காட்டாவிட்டாலும்,தன் பிள்ளைகளுக்கு எந்த ஒரு துன்பமும் நிகழ்ந்துவிட கூடாது என பாதுகாத்துக்கொள்ளும் குணம்கொண்டவர் தந்தை.எந்த சூழலிலும் தன் குழந்தைகளை விட்டு கொடுக்காததந்தையின் அன்பை பிரதிபலிக்கும்  பல தருணங்களை பார்த்துருப்போம்.

இது போன்று சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று  வைரலாகி வருகிறது.அதில் இரு கால்களை இழந்த தந்தை தன் இரு குழந்தைகளை தினம் தினம் பள்ளிக்கு அழைத்துச்செல்கிறார்.

வீடியோவில், இரு  குழந்தைகள் பள்ளி சீருடையில் , மூன்றுசக்கர சைக்கிளில் முன்னே அவரின் மகனும்.பின்னே அவரின் மகளும் உட்காந்து செல்கின்றனர்.தன் குறை குழந்தைகளை எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பது போல இந்த தந்தையின் செயல் உள்ளது.

இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சமூக வலைதளமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த தந்தையின் செயல்  இணையவாசிகளை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.