கின்னஸ் சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

235

அமராவதி மற்றும் அகோலா ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையிலான 75 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலையை, 105 மணி நேரத்தில் அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பொறியாளர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள், நில அளவை அதிகாரிகள் உள்பட 700 பேர் மற்றும், சாலைப்பணியாளர்கள் 800 பேரைக் கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலகில் மிக விரைவாக போடப்பட்ட நெடுஞ்சாலை என்ற பெருமையை அமராவதி மற்றும் அகோலா ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையிலான 75 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலை பெறுவது குறிப்பிடத்தக்கது.