iPhone 17 ப்ரோவிற்கு பதிலாக கம்மியான பட்ஜெட்டில் சூப்பரான ஆண்ட்ராய்டு மொபைல்கள்! இந்த list-ல இருக்குற ஃபோன்-கள பாருங்க!

உலகம் முழுவதும், இந்தியா உட்பட, கடந்த செப்டம்பர் 19 முதல் ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ப்ரோ மாடல்கள் கடந்தாண்டை விட அதிக விலையில்தான் அறிமுகமாகியுள்ளன. 17 ப்ரோ விலை ரூ.1,34,900 முதல் தொடங்குகிறது. அதேசமயம் 17 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,49,900 ஆகும். அதிக விலை காரணமாக, ஐபோன் வாங்க நினைப்பவர்கள் மற்ற ஃபோன்-களை பரிசீலிக்கலாம். அப்படிப்பட்ட 5 சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றி பார்க்கலாம்.

முதலாவதாக ஒன்பிளஸ் 13. 6.82-இன்ச் AMOLED திரையுடன் வரும் இந்த மொபைலில் Snapdragon 8 Elite சிப், 24GB RAM மற்றும் 1TB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 50MP டிரிபிள் கேமரா அதில் வைட், டெலிஃபோட்டோ, அல்ட்ராவைட் Option-கள் உள்ளன. மற்றும் 6000mAh பேட்டரியுடன், 100 watt வயர்டு, 50 watt வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அடுத்து விவோ X200 ப்ரோ. 6.78-இன்ச் AMOLED 120Hz டிஸ்ப்ளே கொண்ட இந்த மாடலில் MediaTek Dimensity 9400 சிப் மற்றும் 16GB RAM உள்ளது. 200MP Zeiss கேமரா செட்டப் ப்ரோ-கிரேட் புகைப்படங்களை வழங்குகிறது. இது Android 15 அடிப்படையிலான Funtouch OS-ல் இயங்குகிறது.

அடுத்து சியோமி 15. Leica-வின் கேமரா சிஸ்டத்துடன் வரும் இந்த மாடல், Snapdragon 8 Elite சிப், வலுவான பேட்டரி மற்றும் பிரீமியம் டிசைனை கொண்டுள்ளது. சிறந்த கேமரா தரம் இதன் பலம்.

அடுத்ததாக பிக்சல் 10 ப்ரோ XL. கூகுள் பிக்சல் 10 ப்ரோ XL 6.8-இன்ச் LTPO OLED திரை, 3K ரெசல்யூஷன் கொண்டது. 16GB RAM, 256GB ஸ்டோரேஜ், புதிய Tensor G5 சிப் வழங்கப்பட்டுள்ளது. 50MP பின்புற டிரிபிள் கேமரா மற்றும் 42MP செல்ஃபி கேமரா புகைப்பட ஆர்வலர்களை கவர்கிறது.

அதனால், அதிக விலை கொண்ட ஐபோன் 17 ப்ரோவுக்கு மாற்றாக, இத்தகைய ஆண்ட்ராய்டு பிரீமியம் மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது.