மினி கார்டனாக மாறிய ரிக்ஷா வண்டி

184
Advertisement

இணையம் என்பது புதுமையான படங்கள் மற்றும் வீடியோக்களின் புதையல் ஆகும், இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு சுவாரஸ்யமாக்குகிறார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

பொதுவாக அனைவரலாலும் வெறுக்கப்படும் பருவநிலை வெப்பம். குளிரை கூட சமாளித்து விடலாம் ஆனால் வெயிலை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் நிலைமை மிகவும் கடினம்.

இதுபோன்ற சூழலை சமாளிப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளது.இதில் ஒரு பாதியாக வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள ஆட்டோ போன்ற வாகனங்களில் புல் செடிகளை வளர்த்து அசத்தியுள்ளனர் சில ஓட்டுனர்கள்

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் , ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் பகிந்து ஒரு புகைப்படத்தில் , ஓட்டுநர் ஒருவர் தனது ரிக்ஷாவை குட்டி கார்டானாக மாற்றியுள்ளார்.தன் வண்டியில் பயணிப்போர் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள
ரிக்ஷா முழுவதும் பல சிறிய தொட்டிகளில் புல் மற்றும் சிறிய செடிகளை மூலம் ரிக்ஷாவின் மேல்கூரையை மூடி உள்ளார்.

தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.