பாட்டி செய்யும் காரியத்தைப் பாருங்க! ஆடிப் போய்டுவீங்க…

grandma bike ride
Advertisement

மூதாட்டி ஒருவர் தானாகவே பைக் ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எந்தவொரு சிறிய விஷயமும் உடனடியாக பகிரப்படும் போது அதனை காணும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து விட்டால் அதற்கு பிறகு அந்த வீடியோவை பற்றி சொல்லவா வேண்டும்., அந்த வீடியோ-விற்கு கிடைக்கும் வரவேற்பு என்ன, மரியாதை என்ன?

இன்றைய இளைஞர்கள் பைக் ஓட்ட விரும்புகிறார்கள். அதுவும் சர்க்கர்ஸ் காட்சிகளுக்கு நிகராக அவர்கள் சாலையில் வெளிக்காட்டும் சாகசம் ஒன்று நம்மை சபாஷ் போட வைக்கும். அந்த வரிசையில் இளைஞர்களைப் போலவே திறமையான முதியோர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

இப்போது நாம் பார்க்கவிருப்பது மூதாட்டி ஒருவர் அவருக்கே உரித்தான உடையில் ஜென்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டுகிறார். அதுவும் அவர் கேமராவைப் பார்த்து சிரித்துக்கொண்டே யமஹா ஆர் 15 மாடல் பைக்கை ஓட்டுகிறார்.

Advertisement

இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது எனவும் மூதாட்டி குறித்த விவரங்களும் தெரியவில்லை. ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கை மூதாட்டி ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.