முன்ஜாமீன் வழங்குவதில் திருப்பம் கொண்டுவரவுள்ள அரசு

54

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள், முன்ஜாமீன் கோரும் போது அதை மறுக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை கொண்டு வர அம்மாநில அரசு முடிவு செயதுள்ளது. இதற்காக குற்றவியல் தடுப்பு சட்டம் 438-ன் சில பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான ஒப்புதல் கோரி, மாநில உள்துறை சார்பில் அரசிடம் முன்வரைவு மசோதா அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் மூலம்  பாலியல் புகார்களில் சம்மந்தப்பட்ட நபர்களின் மரபணு மற்றும் உயிரியல் ஆதாரங்களை உடனுக்குடன் சேகரிப்பதை உறுதி செய்வதும், அத்தகைய உயிரியல் சான்றுகள் அழிக்கப்படுவதை தடுப்பதும், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பை குறைப்பதும், இந்த சட்டத் திருத்ததின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.