மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

32
Advertisement

மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள், பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும், பாடச்சுமைகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், பள்ளிச்சூழலில் மாணவர்களுக்கு முழுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement