நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தியுள்ள அரசு

46

சென்னை கோட்டத்திற்குட்பட்ட 8 ரயில் நிலையங்களில் இன்று முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை பிளாட்பாரம் கட்டணம் 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.