இயந்திரத்தை விட வேகத்தில் பின்னிய அரசு ஊழியர்

247
Advertisement

ஜார்கண்ட் மாநிலம் துணை  கலெக்டராக இருக்கும் சஞ்சய்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில்,அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் அதிவேகமாக கோப்புகளில் முத்திரை குத்துகிறார்.

இந்த வீடியோ உடன்,அந்த ஊழியரின் வேகத்தை குறிப்பிட்டுள்ள அவர், இவரின் வேகத்தை பார்த்து அனைவரும்  திகைத்து போவார்கள், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அலுவலகமும் இவ்வளவு வேகமாக செயல்பட்டிருந்தால் பல பிரச்சினைகளின் கோப்புகள் நிலுவையில் இருந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

‘பொறுப்புகள்’ தான் நம்மை ‘மனிதனில்’ இருந்து ‘இயந்திரம்’ ஆக்குகிறது என்ற தலைப்பில் இந்த வீடியோ பகிரப்பட்டு உள்ளது.