12ஆம் வகுப்பு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது…..

212
Advertisement

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த 8ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகம் முழுவதும் 94 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்தவர்கள், விடைத்தாள்‌ நகலினை இன்று பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்  www. dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு 205 எனவும், உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.