“கூகுள் மேப் தவறு, தாமதம்” ஒரு மாணவர் 5 கிமீ ஓடி நீட் தேர்வு எழுதினார்…

21
Advertisement

கோவையை சேர்ந்த மாணவர், கூகுள் மேப் உதவியால் 5 கிலோ மீட்டர் ஓடி சென்று நீட் தேர்வு எழுதி தனிகவனம் பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சர்ஜித் என்ற மாணவர், நீட் தேர்வு எழுதற்காக கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, கூகுள் மேப் உதவியுடன் பேருந்து நிலையத்திலிருந்து தேர்வு மையம் உள்ள பள்ளிக்கு சென்றார்.  தேர்வு மையம் இருக்கும் இடம் தெரியாததால், அலைந்து திரிந்து 5 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று தேர்வு மையத்தை அடைந்து, நீட் தேர்வு எழுதினார். கூகுள் மேப் உதவியால் 5 கிலோ மீட்டர் ஓடி சென்று நீட் தேர்வு எழுதிய மாணவரின் பக்கம் பலரது கவனமும் திரும்பியுள்ளது.