சென்னையை சேர்ந்த மொத்த நகை வியாபாரியான மணி, சென்னையில் இருந்து தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு சென்றுள்ளார்.
மணி நேற்றிரவு நகைகளுடன், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள, உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார்.
உணவகத்தில் பணம் கொடுப்பதற்காக, நகை பையை கீழே வைத்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர்கள் நகை பையை திருடிச் சென்றுள்ளனர்.
நகை பையில் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.