சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது

132

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து, 4 ஆயிரத்து 815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய் 10 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Advertisement