விறுவிறுப்பாக நடக்கும் ஆட்டு விற்பனை, குஷியில் விற்பனையாளர்கள்

63

ஆத்தூர் அருகே ஆட்டுச்சந்தையில் ஆட்டின் விலை அதிகரித்திருந்தாலும், விறுவிறுப்பாக நடந்த விற்பைனையில், இரண்டரைக் கோடி ரூபாய் வியாபாரிகள் வருவாய் ஈட்டியுள்ளனர் நாளை மறுநாள் தீபாவளி திருநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டு சந்தை இன்று கூடியது, பண்டிகையையொட்டி வெள்ளாடு, செம்மறி, மேச்சேரி ஆடுகள் என நூற்றுக்கணக்கில் ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

ஆடுகளின் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், விறுவிறுப்பாகத் தொடங்கிய விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதுவரை இரண்டரை கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தன்ர்.