ரீல்ஸ் செய்த பெண்ணை துரத்தியடித்த “பசு”

275
Advertisement

எங்கு பாத்தாலும்,எப்போ பாத்தாலும் போனை கைல வைச்சுக்கிட்டு ரீல்ஸ் செய்ய ஒரு தனி கூட்டமே இருக்கு.ஆரம்பத்துல  பொழுதுபோக்க தொடங்கிய இது,தற்போது பொழப்பு ஆகிவிட்டது  சிலருக்கு.

இது போன்று  சமூக வலைதளத்தில் ரீல்ஸ் செய்பவர்களை கண்டாலே சிலருக்கு கோபம் வரும்,சிலருக்கு அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து சிரிப்பு வந்துவிடும்.

இங்கு அப்படி தான், இளம்பெண் ஒருவர்  ரீல்ஸ் செய்ய முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது.அது ஏன் என்று நீங்களே பாருங்க.முதலில் அந்த இளம்பெண் ரீல்ஸ் செய்ய, நின்றுகொண்டு இருந்த பசு மாடு ஒன்றின் முன் தயாராக நிற்கிறார்.

பாட்டு தொடங்கியவுடன் நடன அசைவுகளை செய்ய தொடங்கும் அவரை கவனித்துக்கொண்டு இருந்த இந்த பசு,என்ன நினைத்தது  என்று தெரியவில்லை… நேராக அந்த பெண்ணை, முட்ட தலையை சாய்த்துக்கொண்டு முன்னே செல்கிறது.

அய்யயோ..!என அலறிய அந்த பெண் சட்டென ஆடுவதை நிறுத்திவிட்டு,ஓரமாக இருந்த வாகனத்தின் பின் சென்று நின்று கொள்கிறார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பலரும் இந்த வீடியோவை ட்ரோல்  செய்து வருகின்றனர்.