“போட்டோக்ராபர் ஏன் அரேஞ்ச் பண்ணல” கடுப்பில் தன்  கல்யாணத்தை நிறுத்திய பெண்

231
Advertisement

நாட்டில் ஏதோ ஒரு மூலையில் வித்யாசமான காரணங்களால் தாலி காட்டும் கடைசி நிமிடத்தில் தன் கல்யாணத்தை மணப்பெண்ணே நிறுத்திய நிகழ்வுகள் நமக்கு வியப்பை ஏற்படுத்தியதை பார்த்தோம்.

உதாரணமாக,மணமேடையில் காத்து அடித்து மணமகன் விக் கழண்டதால்,கடைசி நிமிடத்தில் கல்யாணத்தை நிறுத்தினார் அந்த பெண்.மற்றொரு திருமணத்தில் மணமகன் நடனமாடியதால்,மணமகளால் திருமணம் திருத்தப்பட்டது.மற்றொரு இடத்தில்,திருமணத்திற்கு மணமகன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தாமதமாக வந்த கடுப்பில்,அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த வருசையில்,மற்றொரு வித்யாசமான காரணத்திற்க்காக கடைசி நிமிடத்தில் தன் திருமணத்தையே நிறுத்தியுள்ளார் பெண் ஒருவர்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹாட்டில் உள்ள மங்கல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளுக்கு போக்னிபூரில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்தன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, திருமண ஊர்வலம் சடங்கு முடித்து மேடையில் மணமக்கள் மாலையை மாற்றிக்கொள்ளும் சடங்கிற்கு இருவரையும் அழைத்துவந்தனர்.அங்கு தான், வாழ்வில்  மறக்கமுடியாத தருணங்களைப் படம்பிடிக்க புகைப்படக்காரர் இல்லை என்பது தெரியவந்தது.

கோவமடைந்த மணமகள் உடனே திருமணத்தையே நிறுத்திவிட்டார்.அவரை சமாதானம் செய்ய அனைவரும்   முயற்சி செய்தனர் ஆனால் தன் முடிவிலிருந்து மாறவில்லை.இது குறித்து அந்த மணமகள்,கூறுகையில்  “இன்னைக்கு நம் திருமணத்தைப் பற்றி கவலைப்படாதவர், எதிர்காலத்தில் என்னை எப்படி கவனித்துக் கொள்ளப் போகிறார்?” என கேள்வியை முன்வைத்தார்.

பின்,இந்த வழக்கு காவல்நிலையத்திற்கு வந்தது, அங்கு பரஸ்பர ஒப்புதலுடன் பரிமாறப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித் தர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.அதன்படி இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கொடுத்த பொருட்களையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தனர்.பொருட்களை வாங்கிக்கொண்டு மணமகன் குடும்பம் சொந்த ஊருக்கு நடையை கட்டினர்