காதலன் காருக்கு தீ வைத்த காதலி

369
Advertisement

இரவில் தோன்றும் நிலவைவிட அழகானது என் மனதில் இருக்கும் உன் நினைவுகள் என ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை பரிமாறிக்கொள்ளும் அழகான உணர்வு காதல்.காதலை பற்றி தெரியவேண்டும் என்றால் காதலிப்பவர்களிடம் கேட்டால் தெரியும். அதே காதல் பற்றி காதலில் ஏமாற்றமடைந்தவர்களுடம் கேட்டால் கன்னாபின்னா என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துவிடுவார்கள்.

ஏன்டா அந்த கேள்வியை கேட்கோணு ஆய்டும்.காதலில் ஒருவர் ஏமாற்றிவிட்டார் என தன்னை தானே தண்டித்துக்கொள்ளும் நபர்களும் உண்டு.ஏன் என்னை ஏமாறினாய் என காதலித்தவரை தண்டிக்கும் நபர்களும் உண்டு.

இதுபோன்று தன்னை ஏமாற்றிய காதலன் மீது இருக்கும் கோபத்தை காதலன் காரின் மீது காட்டிய பெணின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.எங்கு எப்போது இந்த சம்பவம் நடந்தது என குறிப்பிடப்படவில்லை, சமூக வளைத்ததில் பகிந்து வீடியோ ஒன்றில் ,காதலன் தன்னை ஏமாற்றிய கடுப்பில் பெண் ஒருவர் மாஸ்க்அணிந்தபடி ,சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த காதலனின் காரின் ஒருபுறத்தில் கண்ணாடியை உடைந்து பெட்ரோலை காரின் உள்ள ஊற்றி தீயை பற்றவைக்கிறார்.

தீ பற்றவைத்து கண்ணிமைக்கும் நொடியில் தீ காரினுள் நன்றாக பற்றி எரிய , ஜன்னல் வழியாக அந்த பெண்ணின் முகத்தில் தீ பட்டுவிடுகிறது.சுதாரித்துக்கொண்ட அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.இணையத்தில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.