மீண்டும் வருகிறது Game Of Thrones

268
Advertisement

2011ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பட்ட Game Of Thrones தொடர் உலக முழுவதும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளது.

அரசர்கள், போர்கள் என சுழலும் கதைக்களத்தில், சமகால உலக அரசியல் குறியீடுகள் நிறைந்திருப்பது, சற்று உற்று நோக்கினால் தான் புரியும்.

அசாத்தியமான சண்டை காட்சிகள், பிரம்மாண்ட ஒளிப்பதிவு, தனித்துவமான நடிகர்கள், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் ஆகிய பல காரணங்களால் Game Of Thrones பலரின் இதயத்தை கொள்ளை கொண்டது.

தொடரின் கடைசி season கதை முடிவை பற்றி சில ரசிகர்களுக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த தொடர் முடிந்த சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இந்நிலையில், Game Of Thrones தொடரின் sequel ஆக ஜான் ஸ்னோ (Jon Snow) எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Game Of Thrones  தொடரின் முக்கிய கதாபாத்திரமாக இருந்த ஜான் ஸ்னோவின் கதையின் தொடர்ச்சியாக, புதிய தொடர் அமைய உள்ளது.

Game Of Thronesக்கு prequel ஆன House Of the Dragon ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில், sequel அறிவிப்பும் வெளியாகி Game Of Thrones ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.