உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கும் ஜி7 நாடுகள்

363
  1. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜி7 நாடுகள் முன்வந்துள்ளன.

உக்ரைன் மக்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக நிதி வழங்குவதாக ஜி7 கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.