G.S.L.V- F10 ராக்கெட் வரும் 12ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ

Advertisement

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்டதால் திட்டமிட்டவாறு இஸ்ரோ செயற்கைகோள்களை செலுத்தவில்லை.

இந்நிலையில். கடந்த பிப்ரவரி 28 ம் தேதி PSLV 51 ராக்கெட் மூலம் பிரேசிலைச் சேர்ந்த அமேசோனியா பூமி கண்காணிப்பு செயற்கைகோள் மற்றும் 18 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து,  வரும் 12ம் தேதி காலை 5.43 மணிக்கு 2வது ராக்கெட்டை இஸ்ரோ செலுத்த திட்டமிட்டுள்ளது.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல் , பேரிடர் எச்சரிக்கை, பனி மற்றும் பனிப்பாறைகள் குறித்து அறிய 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட EOS-3 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை பூமியின் மேற்பரப்பில் இருந்து 36 ஆயிரம்  கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்தில் இருந்து செலுத்துவதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கான கவுண்ட் டவுன் அடுத்த வாரம் தொடங்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.