குட்டைக்குள் விழுந்த கணவன் – குலுங்கி குலுங்கி சிரித்த மனைவி

fun
Advertisement

மாலத்தீவில் குடும்பத்தலைவர் ஒருவர் சேறும் சகதியுமாக குட்டையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சம்பவத்தை கண்டு அவரது மனைவி வயிறு வலிக்க சிரித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது உங்களுக்கு 100 சதவீதம் சிரிப்பை நிச்சயம் ஏற்படுத்தும். ஒரு சில சமயங்களில் நாம் குறுக்குவழியை தேர்ந்தெடுப்பது அதுவே நமக்கு ஆபத்தாக முடியலாம் .

உதாரணத்திற்கு இந்த வீடியோவை பாருங்கள்..

இதில் தோன்றும் நபரின் பெயர் மார்ட்டின் லூயிஸ் என்ற பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, இவரது மனைவி ரேச்சலுடன் மாலத்தீவுக்கு சென்று அங்குள்ள அழகிய இடங்களை பார்த்துக்கொண்டே வந்திருக்கிறார்.

இதனிடையே, இவர் ஒரு சதுப்பு நிலத்தில் சேரும் சகதியுமாக இருக்கும் குட்டை பகுதியின் குறுக்கே நடக்க முயல்வதை நீங்களே பாருங்கள்.

Advertisement

https://www.instagram.com/reel/CR0z8YWHQ7B/?utm_source=ig_web_copy_link

இந்த சம்பவம் குறித்து லூயிஸ் டெய்லி மெயில் பத்திரிகையிடம் தெரிவிகையில்,

”மாலத்தீவில் உள்ள ஒரு இடத்தில் குட்டையின் மறுபுறத்தை கடக்க குறுக்குவழியை உபயோகிக்குமாறு என் மனைவி தான் எனக்கு கூறியதாகவும், தான் அணிந்திருந்த பேண்டின் அடிப்பகுதி எனது செருப்பால் ஈரமாகிவிட கூடாது என்பதற்காக அதனை கழற்றி வைத்துக்கொண்டதாகவும், அந்த இடத்தை  விரைவாக கடக்க முயலும் போது தான், ’நான்’ குட்டையின் உள்ளே முழுவதுமாக மூழ்கியதாகவும்,” தெரிவித்த மார்ட்டின் ”அது மிகவும் ஆழமாக இருந்ததால் எப்படியோ கஷ்டப்பட்டு நான் மேற்பரப்புக்கு வந்ததாக’ தெரிவித்தார்.

’இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருப்பதாகவும், இருப்பினும் அந்த காட்சியை கண்ட எனது மனைவி ‘ரேச்சல்’ சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் சிரித்திருப்பாள் ” என்று ‘மார்ட்டின்’ கூறினார்.

இதனிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ‘ஸ்மைலாகி’ வருகிறது.