முதல்வரின் செயல்பாடு : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி

208

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதற்கு, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள் முழுவதும் தலைவராக இருக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விதிமுறைகளின் படி உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் ஆணையம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது