பிரான்ஸ் மக்கள் நாடு தழுவிய போராட்டம்

france
Advertisement

பிரான்ஸ் நாட்டில் கொரோனா 3 வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்ற நிலையில், 4 வது அலை எப்போது வேண்டுமானாலும் உருவெடுக்கலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன் காரணமாக, பிரான்ஸ் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அதிபர் மெக்ரொன் அமல்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்களை பல்வேறு வழிகளில் அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அரசின் கட்டுப்பாடுகளால், தங்களது சுதந்திரம் பறிக்கப்படுவதால், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement