Thursday, December 26, 2024

கோலாரில் கண்டெடுக்கப்பட்ட சோழர் கால கல் வெட்டு!

கர்நாடகாவிலுள்ள கோலார் தாலுகா நங்கலி ஊராட்சிக்கு உட்பட்ட மரவேமனே கிராமத்தைச் சேர்ந்தவர் தான் நத்தம்.

இவருக்கு சொந்தமான நிலத்தில் பழங்கால கல்வெட்டு ஒன்று கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நத்தம் ஊர்மக்களுக்கு தெரிவித்தார் .

பின்வந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தினர் அகழ்வாராய்ச்சியாளர்களுடன் வந்து அந்த கல்வெட்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

பிறகு இதுபற்றி பெசிய மாவட்ட நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் நிருபர்களிடம் கூறும்போது,

“இங்கு கண்டெடுக்கப்பட்டு உள்ள கல்வெட்டு சோழர் கால கல்வெட்டாகும்.

இந்த கல்லில் வீரமங்கை ஒருவர் கையில் வில் ஏந்தி அம்பு ஏய்வது போலும், அவர் எதிரிகளை வீழ்த்துவது போன்றும் செதுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ள குறிப்புகள், நாணய வடிவங்கள் குறித்து அகழாய்வினர் ஆய்வு செய்து வருகிறார்கள்”,என அவர் தெரிவித்துள்ளார்.

Latest news