Saturday, January 18, 2025

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறை தண்டனையுடன் இம்ரான் கானுக்கு ரூ.10 லட்சம் மற்றும் புஸ்ரா பீவிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news