தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய 11  தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அமைக்கப்பட்ட அவசரகால சிகிச்சை மையங்களை தமிழகஅரசு மூடக்கூடாது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்…

127
Advertisement

மறைந்த பழம்பெரும் நடிகர் பி.யூ சின்னப்பாவின் 106வது பிறந்தநாள் விழா இன்று அவரது ரசிகர்களால் புதுக்கோட்டையில்  கொண்டாடப்பட்டது.

சின்னப்பாவின் நினைவிடத்துக்கு அவரது  ரசிகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்  அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  தமிழகத்தில் விபத்து அதிகம் நடக்கக்கூடிய சென்னை புதுக்கோட்டை உள்ளிட்ட 11 தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அவசர கால சிகிச்சை மையங்கள் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

தற்போது அவற்றை மூடுவதற்கு அரசு முடிவு எடுத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.  அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடை போக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.