கிணற்றில் விழுந்த சிறுத்தையை மீட்ட வனத்துறை

38
Advertisement

மகாராஷ்டிராவில் திறந்தவெளி கிணற்றில் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்க்கும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திறந்தவெளி கிணற்றில் விழுந்த சிறுத்தையை மேலே இழுக்கும் போது அந்த ஆண் சிறுத்தை உறுமுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.சிறுத்தை கிணற்றில் விழுந்த தகவலறிந்து சம்பவஇடத்திற்கு வந்த வனத்துறை,கூண்டை கிணற்றுக்குள் இறக்கி, சிறுத்தையை பிடித்தனர்.

வன விலங்குகள் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்குவதைத் தடுக்க திறந்தவெளி கிணறுகளை மூடுமாறு,இந்த வீடியோவை பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Advertisement

சிறுத்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அதை வெற்றிகரமாக காப்பாற்றிய வனத்துறை அதிகாரிகளின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.